ரவிராஜ் கொலை: பிரதிவாதிகளைத் தொடர்ந்து தடுத்து வைக்க நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது

ரவிராஜ் கொலை: பிரதிவாதிகளைத் தொடர்ந்து தடுத்து வைக்க நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது

ரவிராஜ் கொலை: பிரதிவாதிகளைத் தொடர்ந்து தடுத்து வைக்க நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 7:50 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் இரண்டு பிரதிவாதிகளைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக இன்று நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மணிலால் வைத்தியரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மேலதிக விசாரணையின் பொருட்டு ரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதிகளில் இருவரை 3 மாதங்களுக்கு தடுத்துவைப்பதற்கு அனுமதி வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அனுமதி கோரப்பட்டது.

இதனை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியரத்ன, 3 மாதங்களுக்கு பிரதிவாதிகள் இருவரையும் தடுத்துவைப்பதற்கான காரணங்களை எதிர்வரும் 25 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்