வடக்கின் 3 கைதிகளும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைப்பு

வடக்கின் 3 கைதிகளும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைப்பு

வடக்கின் 3 கைதிகளும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 10:41 pm

மாலைத்தீவிலிருந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வடக்கைச் சேர்ந்த மூன்று கைதிகளும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

இவர்களில் வடக்கைச் சேர்ந்த குறித்த மூன்று கைதிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மாலைத்தீவில் பதினைந்தரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் மாலைத்தீவு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தை கவனத்திற்கொண்டே இலங்கையில் தடுத்து வைக்க வேண்டிய காலம் தீர்மானிக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரவித்தார்.

விசுவமடு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற்போனதாக அவர்களது பெற்றோர், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த மூவரும் 2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்