காபுல் நகரில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலி,329 பேர் காயம்

காபுல் நகரில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலி,329 பேர் காயம்

காபுல் நகரில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலி,329 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2016 | 9:51 am

நேற்று (19) காபுல் நகரில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காபுலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சக கட்டடத்திற்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் பயணித்த தற்கொலை குண்டுத்தாரியினால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கட்டடம் மற்றும் இராணுவ வளாகங்கள் அமைந்துள்ள பிராந்தியத்திற்கு அண்மையிலுள்ள குடியிருப்பு பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல்களைத் தொடா்ந்து குறித்த பிராந்தியத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பல வீதிகளும் மூடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

பருவகால தாக்குதல்களுக்கு தாம் தயாராகவுள்ளதாக தலிபான்கள் அறிவித்து சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பினா் உரிமை கோரியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்