கடும் காற்று காரணமாக புத்தளம் அனகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலைக்கு  சேதம்

கடும் காற்று காரணமாக புத்தளம் அனகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலைக்கு சேதம்

கடும் காற்று காரணமாக புத்தளம் அனகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலைக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2016 | 8:54 am

புத்தளம் நகரை ஊடுறுவி வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக புத்தளம் அனகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையின் கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் நகரையும் அதனை அண்டிய பிரதேசத்தில் நேற்று (19) மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக குறித்த பாடசாலை கட்டடத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது பாடசாலை விடுமுறை காரணமாக பாடசாலையில் மாணவர்கள் எவரும் இல்லாமையால் உயிர் பாதிப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்