கஞ்சா கடத்த முயற்சித்த இலங்கையர் பாம்பன் பகுதியில் கைது

கஞ்சா கடத்த முயற்சித்த இலங்கையர் பாம்பன் பகுதியில் கைது

கஞ்சா கடத்த முயற்சித்த இலங்கையர் பாம்பன் பகுதியில் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2016 | 12:14 pm

கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்த இலங்கையர் ஒருவரை பாம்பன் பகுதியில் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 10 கிலோகிராம் கஞ்சா, பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர் கடல் மார்க்கமாக படகு மூலம் தலைமன்னாருக்கு கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக கியூ பிரிவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மன்னாரை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி சுற்றுலா வீசாவில் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் எனவும், பத்தலகுண்டிலுள்ள அவரின் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பாம்பன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்