2016 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டன

2016 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டன

2016 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 4:37 pm

புகைப்படத்துடனான அவசர செய்தி, புலனாய்வு செய்தி, பொதுசேவை செய்தி வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் திறம்பட செயலாற்றிய நிறுவனங்களுக்கு புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க் நகரில் இதனை அறிவித்துள்ள புலிட்சர் விருதுக்குழுத் தலைவர் மைக் பிரைட், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளின் அவல நிலையை மக்களுக்கு எடுத்துக்காட்டிய நியூயோர்க் டைம்ஸ் மற்றும் தாம்ஸன் ராய்ட்டர் ஆகிய நிறுவனங்கள் விருதுகளை வென்றுள்ளதாக அறிவித்தார்.

தஞ்சம் கோரிய சிறுவனை சிலர் சித்திரவதை செய்ததை அப்பட்டமாக வெளிப்படுத்தியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுச்சேவை செய்திப் பிரிவிற்காக அசோஸியேட்டட் பிரஸ் நிறுவனம் விருது பெறுவதாக மைக் பிரைட் தெரிவித்தார். கடல் உணவு விநியோக நிறுவனத் தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

புளோரிடா மாகாணத்தில் உள்ள காப்பகத்தில் மனநிலை பாதித்தோர் அனுபவிக்கும் கொடுமையை வெளிப்படுத்தியதற்காக புலனாய்வு செய்தி பிரிவில் தம்பா பே டைம்ஸ் நிறுவனத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது.

தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் இதுவரை 117 புலிட்சர் விருதுகளைப் பெற்றுள்ளது.

பத்திரிகைத்துறை மட்டுமல்லாமல் இசை, நாடகம் உள்ளிட்டவற்றில் சாதனையாளர்களுக்கு புலிட்சர் நிறுவனம் விருதுகளை வழங்கி வருகிறது.

செய்தித்தாள் நிறுவனர் ஜோசப் புலிட்சர் பெயரில் 1917 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்