110 கி.கி ஹெரோய்னுடன் கைதான வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 16 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

110 கி.கி ஹெரோய்னுடன் கைதான வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 16 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

110 கி.கி ஹெரோய்னுடன் கைதான வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 16 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 3:56 pm

தென் கடற்பரப்பில் 110 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 16 பேரும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் ஈரான் பிரஜைகள் 10 பேரும் சந்தேகநபர்களில் உள்ளடங்குகின்றனர்.

சந்தேகநபர்களிடையே 12 வயது சிறுவனொருவன் காணப்பட்டதாகவும் அவர் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள், நீதவான் முன்னிலையில் அறிவித்தனர்.

குறித்த சிறுவனை அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இரண்டு சந்தேகநபர்களை மனநல வைத்தியரிடம் அனுப்பிவைத்து, அவர்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைக்குள் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து கடந்த முதலாம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்