வடக்கில் காணாமற்போனவர்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடக்கில் காணாமற்போனவர்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடக்கில் காணாமற்போனவர்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 12:33 pm

வடக்கில் காணாமற்போனவர்கள் குறித்து கொழும்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்த காலத்தின் போது காணாமற்போன மூவர் மாலைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டடோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த கிழமை சாவகச்சேரியில் வௌ்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டவரின் மனைவியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (18) முறைப்பாடு செய்துள்ளதுள்ளார்.

விசாரணைகளின் நிமித்தம் குறித்த நபர் அழைத்து செல்லப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்