மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு

மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு

மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 8:32 am

மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து நேற்றைய தினம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்வரும் நாட்களில் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து மே தின ஊர்வலத்தை நடத்துவதே நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் அடுத்த கட்ட வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மே தினக் கூட்டத்தை அடிப்படையாக வைத்து கட்சியை பிளவுப்படுத்தவோ அல்லது ஒரு சாராரை மாத்திரம் முன்னிலைப்படுத்தவோ யாரும் செயற்படமாட்டார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர் முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்