மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 1:22 pm

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை ஊழியர்களினால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை 8.30 மணியளவில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையில் இருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 9 ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதய குமாரின் வீட்டில் தரித்திருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் முன்டெுக்கப்பட்டது.

மாநகர சபைக்கு முன்பாக ஒன்று கூடிய மாநகர சபை ஊழியர்கள், அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்