பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 4:08 pm

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான ஹரன் ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜாவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்