பங்களாதேஷின் மத்திய வங்கியில் இடம்பெற்ற சைபர் குற்றத்துடன் 8 இலங்கையர்களுக்கு தொடர்பு

பங்களாதேஷின் மத்திய வங்கியில் இடம்பெற்ற சைபர் குற்றத்துடன் 8 இலங்கையர்களுக்கு தொடர்பு

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 1:02 pm

பங்களாதேஷின் மத்திய வங்கியில் இடம்பெற்ற சைபர் குற்றத்துடன் 8 இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷின் மத்திய வங்கியிலிருந்து சந்தேகநபர்களால் 10 மில்லியன் டொலர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 20 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் 12 பேர் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் எனவும் ஏனைய 8 பேரும் இலங்கையர்கள் எனவும் ரொய்ட்டர் வெளி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட வங்கியில் சுமார் ஒரு பில்லியன் டொலர்ளை முடக்குவதற்கும் கடந்த பெப்ரவரி மாதம் நான்காம் ஐந்தாம் திகதிகளில் கொள்ளையர்கள் முயற்சித்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பணத்தில் 81 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களாதேஷினுள் முடக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய தொகை அங்குள்ள கசினோக்களினுள் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையில் அமையப் பெற்றுள்ள நிறுவனமொன்றிற்கு அனுப்பி வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நிறுவனத்தின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால் வங்கியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்தை அடுத்து பணப் பறிமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டிபிடிப்பதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக பங்களாதேஷின் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் சந்தேகநபர்களின் விபரங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சைபர் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்