நிட்டம்புவயில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 15 பேர் காயம் 

நிட்டம்புவயில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 15 பேர் காயம் 

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 6:07 pm

நிட்டம்புவ – ரதாவடுன்ன பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்றும், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

காயமடைந்தவர்கள் வரக்காபொல மற்றும் வத்துபிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் மூவர் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்