தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக 125 முறைப்பாடுகள்

தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக 125 முறைப்பாடுகள்

தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக 125 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 6:41 am

புத்தாண்டு காலப்பகுதியில் தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக 125 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.

குறித்த பஸ் ஊழியர்கள் தவறு செய்தமை உறுதி செய்யப்பட்டால் 3 மாதங்களுக்கு அவர்களின் பஸ்களுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இரத்து செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளில் சில பொய்யானவை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பி.ஹேமசந்திர மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்