சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு விசாரணை: பொ.ஐங்கரநேசன் நீதிமன்றில் ஆஜர்

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு விசாரணை: பொ.ஐங்கரநேசன் நீதிமன்றில் ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 6:34 pm

சுன்னாகத்தில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை நீதிமன்றில் ஆஜராகுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனடிப்படையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இன்றைய தினம் உடுவில், தெல்லிப்பளை, வலிகாமம் பொது சுகாதார உத்தியோகத்தர்களது அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்