சர்வதேச கடல் எல்லையூடாக இடம்பெறும் கடத்தல்களை தடுப்பதற்கு கடற்படையினருக்கு விசேட பயிற்சி

சர்வதேச கடல் எல்லையூடாக இடம்பெறும் கடத்தல்களை தடுப்பதற்கு கடற்படையினருக்கு விசேட பயிற்சி

சர்வதேச கடல் எல்லையூடாக இடம்பெறும் கடத்தல்களை தடுப்பதற்கு கடற்படையினருக்கு விசேட பயிற்சி

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 8:51 am

சர்வதேச கடல் எல்லையூடாக முன்னெடுக்கப்படும் கடத்தல்களை நிறுத்துவதற்கு கடற்படையினருக்க பயிற்சி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடற்படை உறுப்பினர்களை பயிற்சியின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச கடல் எல்லையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கான இரண்டு யுத்த கப்பல்கள் அடுத்த வருடம் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாகவும் கடற்படை தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச கடல் எல்லையில் முன்னெடுக்கப்படும் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்