கொழும்பு – கண்டி அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பம்

கொழும்பு – கண்டி அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பம்

கொழும்பு – கண்டி அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 7:08 am

கொழும்பு – கண்டி அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முதல் கட்ட நிர்மாணப் பணிகள் சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேலைத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை கொழும்பு – கண்டி அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை உள்நாட்டு நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு அமைய அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்தாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

வீதி நிர்மாணத்தின் போது சுவீகரிக்கப்படும் தனியார் காணிகளுக்கான இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்ர் லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்