காலியில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

காலியில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

காலியில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 9:57 am

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் காலியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் நேற்றிரவு 8 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 09 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ஒன்றும, 08 ரவைகளும் மெகசீன் ஒன்றும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இந்த சந்தேகநபர் நான்கு கொலைகளுடன் தொடர்புபட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 29 வயதான ஒருவரே இரகசிய பொலிஸ் விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்