ஈக்வடோர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 413 ஆக உயர்வு

ஈக்வடோர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 413 ஆக உயர்வு

ஈக்வடோர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 413 ஆக உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 5:29 pm

ஈக்வடோரில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் முதல் தொகுதியினரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

7.8 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் காயமடைந்துள்ளதுடன் பலர் காணாமற்போயுள்ளனர்.

ஈக்வடோரில் பசுபிக் கடற்கரைப் பகுதியில் பல நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாகத் தாக்கியதில், வீடுகள், கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவை இடிந்து தரைமட்டமாகின.

வெளிநாட்டு உதவிகளுடன் மீட்பு நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வந்தாலும், பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் உதவிகள் சென்றடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்