இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 7 மாத சிசு உள்ளிட்ட அறுவர் காயம்

இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 7 மாத சிசு உள்ளிட்ட அறுவர் காயம்

இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 7 மாத சிசு உள்ளிட்ட அறுவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2016 | 10:58 am

இரத்தினப்புரியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 மாத சிசு உள்ளிட்ட மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (18) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

விபத்தில் 4 ஆண்களும் பெண்ணொருவரும் 7 மாத சிசுவும் காயமடைந்த நிலையில் இரத்தினப்புரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினப்புரி பட்டுகெதர பகுதியிலிருந்து பெல்மதுல்லை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுதப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது இரண்டு முச்சக்கரவண்டி சாரதிகளும் காயமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் இரத்தினப்புரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்