இரத்தினபுரியின் மூன்று பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

இரத்தினபுரியின் மூன்று பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

இரத்தினபுரியின் மூன்று பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 7:04 pm

இரத்தினபுரி மாவட்டத்தின் மூன்று பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எஹலியகொட, பலாங்கொடை மற்றும் இபுல்பே ஆகிய பகுதிகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் மழை நீடிக்குமாயின் மண்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளில் இன்று மாலை மின்சார விநியோகம் தடைப்பட்டது.

கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்தது.

கொலன்னாவ உப மின்நிலையத்திலிருந்து கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பு கோட்டை வரை மின்சாரத்தை விநியோகிக்கும் நிலக்கீழ் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன தெரிவித்தார்.

இதனிடையே ஹட்டன் நகரை அண்மித்த பல பகுதிகளில் சுமார் ஒரு மணித்தியாலம் பலத்த மழை பெய்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஹட்டன் நகரின் பல பகுதி மழை நீரில் மூழ்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்