65,000 வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை

65,000 வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை

65,000 வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 8:15 pm

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 65,000 வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழுவின் ஏகோபித்த தீர்மானத்தை விளக்கும் வகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இன்று எதிர்க்கட்சி தலைவர் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

வடக்கு கிழக்கில் 1,37,000 வீடுகள் தேவையாக உள்ள நிலையில் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் உத்தேச வீடமைப்புத் திட்டத்திற்கான கேள்வி மனு நடைமுறை தொடர்பிலும், அமைக்கப்படவுள்ள வீடுகளின் ஆயுட்காலம் தொடர்பிலும் பல சிக்கல்கள் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில் 10 வருடங்களுக்குமேல் வசிக்க முடியாது என நிபுணர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தமது கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களிற்கு வீடு என்பது வெறுமனே ஒரு உறைவிடம்அல்லவெனவும் மாறாக அது அவர்களது கலாசாரத்திலிருந்து பிரித்துபார்க்க முடியாத ஒன்றாகும் எனவும் அந்த கடித்த்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு வீட்டை அமைப்பதற்கான செலவு 2.1 மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இரா,சம்பந்தன், இந்திய வீடமைப்புத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகும் என கூறியுள்ளார்.

இந்த வீடுகள் இலங்கை போன்ற நாடுகளின் சுற்றுச்சூழலுக்குபொருத்த மற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தமக்குள்ள அர்ப்பணிப்பை பகிரங்கமாக அரசாங்கம் வெளிக்காட்டியுள்ள போதிலும் அரசியல் இலாபங்களுக்காக வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், அந்த அர்ப்பணிப்பை செயற்ப்படுத்த முடியாத ஒரு நிலைமை ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

65,000 வீட்டுத் திட்டம் வடக்கு கிழக்கு மக்களின் கலாசாரத்திற்கும், சுற்றுசூழலுக்கும் எந்த வகையிலும் பொருந்தாது என கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி வீடமைப்புத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விலேயே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]t.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்