மட்டக்களப்பு,வாகரையில் அமைக்கப்படவுள்ள இறால் கைத்தொழில் வலய திட்டத்திற்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு,வாகரையில் அமைக்கப்படவுள்ள இறால் கைத்தொழில் வலய திட்டத்திற்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு,வாகரையில் அமைக்கப்படவுள்ள இறால் கைத்தொழில் வலய திட்டத்திற்கு எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 8:43 pm

மட்டக்களப்பு – வாகரையில் அமைக்கப்படவுள்ள இறால் கைத்தொழில் வலய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வாகரையில் இறால் கைத்தொழில் வலயம் அமைக்கும், இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படடது .

இதன் போது வாகரை திருகோணமலை வீதியை மறித்து சுமார் 3 மணிநேரம் பணிச்சங்கேணி
பாலத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன் போது குறித்த வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் .

இறால் கைத்தொழில் வலயத்தினை ஆரம்பிப்பதனால் தமது பிரதேச வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் , களப்பு நீர் மாசுபடுவதாகவும் போராட்டக்காரர்களினால் இதன் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

இதன் போது போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூடட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசனால் வழங்கப்பட்ட வாக்குறுதியைடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்