25 இற்கும் அதிக தடவைகள் நுரைச்சோலை அனல் மின்னிலையம் செயலிழந்தமைக்கான காரணம் என்ன?

25 இற்கும் அதிக தடவைகள் நுரைச்சோலை அனல் மின்னிலையம் செயலிழந்தமைக்கான காரணம் என்ன?

25 இற்கும் அதிக தடவைகள் நுரைச்சோலை அனல் மின்னிலையம் செயலிழந்தமைக்கான காரணம் என்ன?

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 6:29 pm

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அமைக்கும் போது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கவனத்திற் கொள்ளப்படவில்லையென முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவிக்கின்றார்.

அனல் மின்நிலையம் செயலிழந்த போது அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரன செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக செயலிழந்து காணப்பட்ட அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

தற்போது மின்உற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கிகளும் செயற்படுகின்றன.

1.35 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக 300 மெகாவட் மின்சாரம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

பின்னர் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் மூலம் 300 மெகாவட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்துக் கொள்ளப்பட்டது.

கடந்த காலங்களில் 25 இற்கும் அதிக தடவைகள் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்துள்ளது.

இதன் போது போதிய அனுபவமின்மையே இந்த பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்ததாக பேராசிரியர் தெரிவித்தார்.

மேலும் திட்டமிட்டு இந்த மின் தடை ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்