தாயகம் திரும்பியுள்ள அகதிகளின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்வு

தாயகம் திரும்பியுள்ள அகதிகளின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்வு

தாயகம் திரும்பியுள்ள அகதிகளின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்வு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 1:57 pm

இந்தியாவிலுள்ள இலங்கை அகதி முகாமிலிருந்து தாயகம் திரும்பியுள்ளவர்களின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான உடனடித் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் தமிழகத்திற்கு அகதிகளாக சென்று நாடு திரும்பியதன் பின்னர் வடக்கு கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளவர்கள் பிரஜாவுரிமயைபெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தமிழகத்திலுள்ள அகதிமுகாமிலிருந்து மேலும் 20 பேர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

சென்னையிலிருந்து இவர்கள் வருகைதரவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

பத்து ஆண்களும் பத்து பெண்களுமே நாடு திரும்பவுள்ளனர்.

நாடு திரும்புவுள்ளவர்கள் திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராயலத்தினூடாக இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்படவுள்ளதுடன், வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்