ஜீ7 மாநாட்டில் கலந்து கொள்வது இலங்கை தொடர்பிலான நல்லபிப்பிராயத்தை வலுப்படுத்தும்

ஜீ7 மாநாட்டில் கலந்து கொள்வது இலங்கை தொடர்பிலான நல்லபிப்பிராயத்தை வலுப்படுத்தும்

ஜீ7 மாநாட்டில் கலந்து கொள்வது இலங்கை தொடர்பிலான நல்லபிப்பிராயத்தை வலுப்படுத்தும்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 8:24 pm

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தௌிவுபடுத்தினார்.

ஜீ 07 நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் பங்கு பற்றுவதன் நிமித்தம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மே மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜீ7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பலம் வாய்ந்த 7 நாடுகளினதும் தலைவர்களிடத்திலும் இலங்கை தொடர்பில் நல்லபிப்பிராயத்தை உருவாக்க மேற்கொள்ளும் ஜனாதிபதியின் பிரயத்தனத்துக்கு இது சிறந்ததொரு சந்தர்ப்பம் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

[quote]எந்தவொரு கட்சியாக இருந்தாலும் அவற்றுக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்ட ரீதியான தலைவராக செயற்படுவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லாது வேறெவருமல்ல. பொறுமை காத்து இருந்துவிட்டுத்தான் திருந்துவதற்கு சந்தர்ப்பங்கள் ஏராளாமக வழங்கியிருந்தும் அவற்றை எல்லாம் பயன்படுத்தாத சிலரை மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி கட்சியிலிருந்து சிலரை நீக்குவதற்கு தீர்மானத்தை எடுத்திருந்தார். மைத்ரிபால ஜனாதிபதி அவர்கள் எமது கட்சியின் தலைவராக இருப்பதால்தான் எமது ஆதரவாளர்கள் நல்ல முறையில் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சிலர் அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளனர். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்