கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 12:28 pm

கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதியில் வத்தளை மாபொல பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாபொல வெலிகடமுல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 3 மணியளவில் கொல்களன் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதியில் செல்லுமாறு பொலிஸார் அறிவுருத்தியுள்ளனர்.

அதற்கமைய கொழும்பிலிருந்து வத்தளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹெந்தல சந்தியூடாக எலகந்தைக்கு சென்று, அங்கிருந்து கெரவலப்பிட்டி பிரதேச சபைக்கருகில் வலது பக்கமாக திரும்பி குணசேகர மாவத்தையூடாக வத்தளை நீர்கொழும்பு பிரதான வீதிக்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்