காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு

காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு

காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 1:28 pm

காலிக்கும் மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

காலிக்கும் கட்டுகொடைக்கும் இடையில் தடம்புரண்டிருந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் மார்க்க திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் மாத்தறையிலிருந்து ரயில் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாத்தறையிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவை குறித்த நேரத்தில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பட்டுள்ளது.

ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து தடைப்பட்டதையடுத்து, இன்று காலை முதல் மாற்று போக்குவரத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து காலி மற்றும் கட்டுகொட வரை சாதாரண ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அங்கிருந்து காலி வரை பஸ்கள் ஊடாக பயணிகளை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் இருந்து காலி வரை பயணித்த ரயிலொன்று வக்வெல்ல ரயில் குறுக்கு வீதியில் நேற்று (18) மாலை தடம் புரண்டதையடுத்து ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

ரயில் தடம்புரண்டமையால் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் மார்க்கத்திற்கு பெரும் சேதமேற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்