கரையோர மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு திரும்பவில்லை

கரையோர மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு திரும்பவில்லை

கரையோர மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு திரும்பவில்லை

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 7:11 am

ரயில் தடம்புரண்டமையால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவை இதுவரை வழமைக்கு திரும்பவில்லை.

இன்று காலை 10 மணியளவில் வழமைக்கு திரும்பும் என பிரதி ரயில் ​போக்குவரத்து அதிகாரி வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து காலி மற்றும் கட்டுகொட வரை சாதாரண ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அங்கிருந்து காலி வரை பஸ்கள் ஊடாக பயணிகளை அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் தடம்புரண்டமையால் தடைப்பட்ட ரயில் போக்குவரத்துக்களான ரஜரட்ட​ ​ரெஜின, காலு குமாரி, ருஹுனு குமாரி உட்பட்ட பல ரயில்கள் காலி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாத்தறையில் இருந்து காலி வரை பயணித்த ரயிலொன்று வக்வெல்ல ரயில் குறுக்கு வீதியில் நேற்று மாலை தடம்புரண்டது.

ரயில் தடம்புரண்டமையால் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் மார்க்கத்திற்கு பெரும் சேதமேற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்