கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தம்மீதான குற்றச்சாட்டிற்கு மு.கருணாநிதி பதில்

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தம்மீதான குற்றச்சாட்டிற்கு மு.கருணாநிதி பதில்

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தம்மீதான குற்றச்சாட்டிற்கு மு.கருணாநிதி பதில்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 4:01 pm

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டிற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு ஜெயலலிதா நிலத்தில் காலூன்றியவராக இருக்க வேண்டும் என தி.மு.க தலைவர் கூறியுள்ளார்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கான தீர்மானத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்கவோ அல்லது அதற்கு ஆதரவு வழங்கவோ இல்லையென அறிக்கையொன்றின் மூலம் மு.கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் ஜெயலலிதா தொடர்ந்தும் தங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற போதிலும் திராவிட முன்னேற்ற கழகம், கச்சத்தீவை மீட்குமாறும், இந்திய மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறும் பல தடவைகள் மத்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைத்துள்ளமையை சுட்டிக்காட்டி அப்போதைய பிரதமர் நரச்சிம்ம ராவ்விற்கு ஜெயலலிதா 1994 ஆம் ஆண்டு கடிதம் எழுதியுள்ளதை தமதறிக்கையில் தி.மு.க தலைவர் நினைவு படுத்தியுள்ளார்.

அதேவேளை கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதனையிட்டு தனது வருதத்தையும் நிலைப்பாட்டையும் 1974 ஆம் ஆண்டு இந்திய பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததாக கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதியிருந்த கடிதம் மூலம் கச்சத்தீவு மீதான இலங்கையின் இறைமையை உறுதி செய்வதாக அமைந்திருந்ததெனவும் அவர தனது அறிக்கையில் தௌிவுப்படுத்தியுள்ளார்.

கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான உரிமை இந்திய மத்திய அரசிடம் மாத்திரமே உள்ளதென சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, ஜெயலலிதா தொடர்ந்தும் வானில் சிறகடித்துக் கொண்டிருப்பாராயின் அவரால் ஒருபோதும் உண்மையை உணர்ந்து கொள்ள முடியாதென மு.கருணாநிதி தமதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்