ஈக்குவடோர் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 272 ஆக உயர்வு

ஈக்குவடோர் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 272 ஆக உயர்வு

ஈக்குவடோர் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 272 ஆக உயர்வு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 11:28 am

ஈக்குவடோரை தாக்கிய பூகம்பத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 272 ஆக உயர்வடைந்துள்ளது.

வீதிகள் , நிர்மாணங்கள் என பல்வேறுபட்ட பொருட் சேதங்களும் பதிவாகியுள்ளன.

ஈக்குவடோரில் நேற்று முன்தினம் (16) வரலாறு காணாதவாறு பூமியதிர்ச்சி பதிவாகியது. இந்த பூகம்பத்தினால் நேற்று வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கி காணமற்போனோர் மற்றும் காயமடைந்துள்ளவர்களை மீட்குட் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான நகரங்கள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில் பெரும் பொருட் சேதங்களும் பதிவாகியுள்ளன.

பசுபிக் சமுத்திர நாடான ஈக்குவடோரை நேற்று முன்தினம் மாலை 6.58 மணி அளவில் 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.

கட்டிடங்கள் பலவும் வீதிகளில் இடிந்து வீழ்ந்துள்ளமையால் பொதுப் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

இதேவளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இத்தாலி சென்றிருந்த ஈக்குவடோர் ஜனாதிபதி ரபாயல் கொராயா மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக நேற்றைய தினம் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாக ஈக்குவடோரின் உப ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பூகம்பத்தில் சிக்கி காயமடைந்தோரின் எண்ணிக்கை 1500 தாண்டியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈக்குவடோரின் ஆறு மாகாணங்களுக்கு தொடர்ந்தும் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈக்குவடோரை தாக்கிய பாரிய இயற்கை அனர்த்தமாக இது கருதப்படுவதாக அந்த நாட்டு அரசாங்ஙகம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் 600 பேர் உயிரிழந்ததுடன் 20,000 பேர் வரை காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்