அரசியல் செயற்பாடுகளை பலப்படுத்தி முன்னோக்கி செல்வோம் – ஜனாதிபதி

அரசியல் செயற்பாடுகளை பலப்படுத்தி முன்னோக்கி செல்வோம் – ஜனாதிபதி

அரசியல் செயற்பாடுகளை பலப்படுத்தி முன்னோக்கி செல்வோம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2016 | 7:11 pm

மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் வரிகளை விதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை புலதிஸி நிலையத்தில் ஜனாதிபதி இன்று மக்களை சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் வரிகளை விதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள்மீது சுமையை ஏற்படுத்தும் வகையிலான வரிகளை விதிப்பதற்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார ஆலோசகர்கள் இருப்பார்களாயின் அத்தகைய ஆலோசகர்களின சேவை அவசியமற்றது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.

[quote]ஊழல், மோசடி, இலஞ்சம், திருட்டு, அடாவடித்தனம் இவை அனைத்தையும் நிராகரித்து விட்டே பொது மக்கள் அரசாங்கம் ஒன்றை அமைத்தனர். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவே நாம் முயற்சி செய்கிறோம். அதனை நான் புத்தாண்டில் உறுதியாக கூறுகிறேன். தோல்வியடைந்த சில சக்திகள் பல்வேறு மாறு வேடங்களில் மீண்டும் முன்வர ஆரம்பித்துள்ளன. அவ்வாறு மாறுவேடம் பூண்டுள்ளவர்களுடன் நாம் கடமையாற்றியுள்ளோம். எனவே அவர்களின் எவ்வித அர்த்தமும் அற்ற கருத்துக்களை கருத்திற் கொள்வதில்லை. நாம் எமது அரசியல் செயற்பாடுகளை பலப்படுத்தி முன்னோக்கி செல்வோம் என்பதனை தௌிவாக கூற விரும்புகிறேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்