24 மணித்தியாலங்களில் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு

24 மணித்தியாலங்களில் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2016 | 9:06 pm

இன்று பிற்பகல் 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபத்தில் கடலில் குளிக்கச் சென்ற இருவர் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நாரமல்ல பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 26 வயதான இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவரும் அடங்குகிறார்.

சுற்றுலா மேற்கொண்டு சிலாபம் கடற்பகுதிக்குச் சென்றிருந்த குறித்த இருவரும் கடலில் நீராடிய போது அலைகளில் அள்ளுண்டு சென்றுள்ளர்.

இதேவேளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை கடலில் குளிக்கச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

16 மற்றும் 19 வயதான இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாத்தறை வெலிகம பிரதேச ஆற்றில் குளிக்கச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்