விசேட ரயில் சேவைகள் இன்றும் முன்னெடுப்பு

விசேட ரயில் சேவைகள் இன்றும் முன்னெடுப்பு

விசேட ரயில் சேவைகள் இன்றும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2016 | 6:35 am

விசேட ரயில் சேவைகள் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதிகருதி இந்த விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.

இதற்கமைய கொழும்பு கோட்டையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, காலை 9.12 க்கு வெயாங்கொடை சென்றடையும் வகையிலும், வெயாங்கொடையில் இருந்து காலை 9.30 க்கு புறப்பட்டு, 12.09 க்கு களுத்துறையை சென்றடையும் வகையில் விசேட ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் களுத்துறையிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 3.31 க்கு வெயாங்கொடையை சென்றடையவுள்ளது.

அதன் பின்னர் வெயாங்கொடையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் மற்றுமொரு ரயில், மாலை 5.12 க்கு கொழும்பு கோட்டையை சென்றடைவுள்ளது.

இதுதவிர மருதானையிலிருந்து களுத்துறைக்கும், களுத்துறையிலிருந்து வெயாங்கொடைக்கும், வெயாங்கொடையிலிருந்து தெற்கு களுத்துறைக்கும், அங்கிருந்து மீண்டும் மருதானைக்கும் விசேட ரயில் சேவைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்