மேன்பவர் ஊழியர்கள் மின்சக்தி அமைச்சு முன்பாக இன்றும் உண்ணாவிரதம்

மேன்பவர் ஊழியர்கள் மின்சக்தி அமைச்சு முன்பாக இன்றும் உண்ணாவிரதம்

மேன்பவர் ஊழியர்கள் மின்சக்தி அமைச்சு முன்பாக இன்றும் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2016 | 3:13 pm

தமது தொழில்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி மேன்பவர் ஊழியர்கள் மின்சக்தி அமைச்சு முன்பாக ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வொன்று கிட்டவில்லை என இலங்கை மின்சார சபையின் மானி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் சுமார் 1400 மானி வாசிப்பாளர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதிலும், இதுவரை எவ்வித தீர்வும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் மானி வாசிப்பாளர் சங்கத்தின் தலைவர் கூறினார்.

தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர்களை பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கும் அனுப்பிவைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேன்பவர் நிறுவனத்தின் பல ஊழியர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதுடன், அவர்கள் இதுவரை சேவையில் நிரந்தரமாக்கப்படவில்லை என சங்கத்தின் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்