பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2016 | 6:58 am

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இன்றும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை ரயில்வே திணைக்களத்துடன் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி பணிபகிஷ்பரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலஙகை பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரிவோர் குழுவின் பிரதம செயலாளர் நிமல் சந்திரசிறி குறிப்பிட்டார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டாயிரத்து 61 பேர் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் தற்போது சேவையாற்றி வருகின்றனர்.

தங்களுக்கான நாளாந்த கொடுப்பனவும் போதுமானதாக இல்லையென இந்த ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாதவிடத்து, குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலஙகை பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரிவோர் குழுவின் பிரதம செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து வினவுதற்காக ரயில்வே பொது முகாயமையாளரை தொடர்புகொள்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆயினும், பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் ரயில் சாரதிகளுக்கு அறிவித்துள்ளதுடன், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற கடவைகள் காணப்படுகின்ற இடங்களில் ரயில் போக்குவரத்தின்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு ரயில் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறினார்.

இதுதவிர பொலிஸாருக்கும் இந்த விடயம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்