தீயினால் உடைமைகளை இழந்த பல்லேகொட மக்களுக்கு புத்தாண்டுப் பொதிகளை வழங்கிய நியூஸ்பெஸ்ட்

தீயினால் உடைமைகளை இழந்த பல்லேகொட மக்களுக்கு புத்தாண்டுப் பொதிகளை வழங்கிய நியூஸ்பெஸ்ட்

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2016 | 7:09 pm

புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக வெலிப்பென்ன, பல்லேகொட மக்கள் எதிர்பாரா அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தனர்.

அனைத்தையும் இழந்திருக்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நியூஸ்பெஸ்ட் குழுவினர், இன்றைய தினம் அவர்களைக் காணச் சென்றிருந்தனர்.

நேற்று முன் தினம் (12) ஏற்பட்ட தீ விபத்தினால் அவர்கள் தமது உடைமைகளை இழந்து பல்லேகொட தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அந்த மக்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக இன்று காலை நியூஸ்பெஸ்ட் குழுவினர் புத்தாண்டுப் பொதிகளை எடுத்துச் சென்று வழங்கினர்.

இரண்டு நாட்களாகக் கண்ணீர் வடித்த அந்த மக்களுக்கு இன்று ஓரளவு நிம்பதி கிடைத்திருக்கும்.

ஆம், அவர்கள் மீண்டெழுவதற்குத் தயாராகவுள்ளனர்!

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்