ஐபிஎல் போட்டி இடம்பெறும் இடங்களில் மாற்றம்

ஐபிஎல் போட்டி இடம்பெறும் இடங்களில் மாற்றம்

ஐபிஎல் போட்டி இடம்பெறும் இடங்களில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2016 | 7:15 am

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு பிறகு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுமையான வறட்சியில் சிக்கியுள்ள அந்த மாநிலத்தில் ஆடுகளங்களுக்கு தேவைப்படும் தண்ணீரை விநியோகிப்பது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையே ஆடுகளங்களை தயார் செய்ய பயன்படுத்துவோம் என இந்தியக் கிரிக்கெட் சபை அளித்த விளக்கத்தை இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு நிராகரித்துவிட்டது.

இதையடுத்து மும்பையில் மே மாதம் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த இறுதி ஆட்டம் உட்பட 13 ஆட்டங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாநில அரசும், இந்தியக் கிரிக்கெட் வாரியமும் கடுமையான வறட்சி நிலவும் சூழலில், அதிகரித்து வரும் பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் சாடியிருந்தனர்.

மே மாதம் நடைபெறவுள்ள போட்டிகளை மாநிலத்துக்கு வெளியே கொண்டுசென்றால், தங்களுக்கு இழப்பு ஏற்படும், ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என இந்த ஐபிஎல்லில் போட்டியிடும் சில அணிகளின் உரிமையாளர்கள் வைத்த வாதங்களையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்