எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2016 | 10:07 pm

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பொன்று மாங்குளத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மக்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

காணி சுவீகரிப்பு, சட்டவிரோத மீன்பிடி உள்ளிட்ட பிரதேச ரீதியான பிரச்சினைகளை முல்லைத்தீவு மக்கள் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவிடம் முன்வைத்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்