வௌியாவதற்கு முன்னரே சாதனை படைத்த தெறி

வௌியாவதற்கு முன்னரே சாதனை படைத்த தெறி

வௌியாவதற்கு முன்னரே சாதனை படைத்த தெறி

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 1:18 pm

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தெறி படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து சாதனை படைத்துள்ளது.

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படம் எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தை வரவேற்க உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று (10) இரவு முதல் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியது முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சென்னையில் ‘தெறி’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் உள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதில் குறிப்பிடும்படியாக, சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகளில் மட்டும் முதல்நாளில் 104 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 104 காட்சிகளுக்குமான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.

இதுதவிர, வெளிநாடுகளிலும் விஜய்க்கு அதிக வரவேற்பு இருப்பதால் அங்கேயும் ‘தெறி’ முன்பதிவு டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.

விஜய் பட வரிசையிலேயே இப்படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் இப்படம் 50 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார் சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்