யேமன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. வரவேற்பு

யேமன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. வரவேற்பு

யேமன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. வரவேற்பு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 3:27 pm

யேமனில் அமுலுக்கு வந்துள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த மோதல்களில் 6,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒரு உண்மையான வாய்ப்பை இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வழங்குவதாக யேமனுக்கான ஐ.நா. தூதுவர் தெரிவித்துள்ளார்.

யேமன் தலைநகர் சனாவுக்கு வெளியே சில போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் ஆதரவுபெற்ற அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவான படைகளுக்கும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக்காரகளுக்கும் இடையிலான மோதல்களால், 20 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்