பெரியபன்றிவிரிச்சான் குள புனரமைப்பில் இடம்பெற்ற மோசடிகளை வௌிக்கொணருமாறு கோரிக்கை

பெரியபன்றிவிரிச்சான் குள புனரமைப்பில் இடம்பெற்ற மோசடிகளை வௌிக்கொணருமாறு கோரிக்கை

பெரியபன்றிவிரிச்சான் குள புனரமைப்பில் இடம்பெற்ற மோசடிகளை வௌிக்கொணருமாறு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 8:53 pm

மன்னார் பெரியபன்றிவிரிச்சான் குளத்தின் புனரமைப்பு பணிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் வெளிக் கொணரப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிலுள்ள பெரியபன்றிவிரிச்சான் கிராமம விவசாயிகள் நெற்செய்கைக்கு தேவையான நீரை இந்த குளத்திலிருந்து பெறுகின்றனர்.

200 விவசாய குடும்பங்கள் சுமார் 600 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்கின்றனர்.

1957 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாரியளவிலாக புனரமைப்பு பணிகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

2013 இல் ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும்
பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், அரசியல் செல்வாக்கு காரணமாக புனரமைப்பு ஒப்பந்தம் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

குளக்கட்டின் புனரமைப்புப் பணிகள் சுமார் 76 மில்லியன் ரூபா செலவில் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், இதற்கு முன்னர் இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த பணிகளும் இடைநடுவில்
கைவிடப்படுமா என விவசாயிகள் அச்சம் வௌியிடுகின்றனர்.

கடந்த காலங்களில் தமது கிராமத்தின் பெயரில் செலவு செய்யப்பட்ட பணத்திற்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்