மகிழ்ச்சியுடன் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் – என்.கே இலங்ககோன்

மகிழ்ச்சியுடன் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் – என்.கே இலங்ககோன்

மகிழ்ச்சியுடன் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் – என்.கே இலங்ககோன்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 8:35 pm

பொலிஸ் மாஅதிபராக செயற்பட்ட என்.கே இலங்ககோன் இன்று பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கையின் 33 ஆவது பொலிஸ் மாஅதிபராக அவர் கடந்த ஐந்து வருடங்களாக செயற்பட்டிருந்தார்.

1980 ஆம் ஆண்டு உப பொலிஸ் இன்ஸ்பெக்டராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட என்.கே இலங்ககோன் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆரம்ப உறுப்பினர் ஆவார்.

யுத்த காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றிய அவர் பொலிஸ் திணைக்களத்தில் பல பதவிகளை வகித்தார்.

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட என்.கே இலங்ககோன் பொலிஸ் சேவையை மக்களுடன் நெருங்கிய சேவையாக மாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

மிகவும் மகழிச்சியுடனே பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டதாக தெரிவித்த என்.கே இலங்ககோன் 36 வருடங்களின் பின்னரும் மகிழ்ச்சியுடனே ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் அர்பணிப்புடன் செயற்படுமாறு அவர் அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு புதிய பொலிஸ் மாஅதிபரை நியமதிப்பதற்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதி அரசியலமைப்பு சபையிடம் ஒப்படைத்துள்ளார்.

ஏ.எஸ்.எம் விக்ரமசிங்க, பூஜித் ஜயசுந்தர மற்றும் சீ.டி விக்ரமரத்ன ஆகிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்
மாஅதிபர்களின் பெயர்களே சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த பொலிஸ் மாஅதிபர் யார் என்பது தொடர்பில் சிபார்சு செய்வதற்காக ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்