நிர்ணய விலையில் நெற் கொள்வனவு செய்யப்படாமையால் நட்டத்தில் தென்மராட்சி விவசாயிகள்

நிர்ணய விலையில் நெற் கொள்வனவு செய்யப்படாமையால் நட்டத்தில் தென்மராட்சி விவசாயிகள்

நிர்ணய விலையில் நெற் கொள்வனவு செய்யப்படாமையால் நட்டத்தில் தென்மராட்சி விவசாயிகள்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 8:44 pm

அரசாங்கம் அறிவித்துள்ள நிர்ணய விலையின்கீழ் நெற் கொள்வனவு செய்யப்படாமையால் தாம் பெரும் நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக யாழ் தென்மராட்சி பிரதேச விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

யாழ் தென்மராட்சி பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே தமது ஜீவனோபாயத்தை கொண்டுசெல்கின்றனர்.

கடந்த வருடம் தென்மராட்சியில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் நெற்கொள்வனவு குறிப்பிடளவு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவ்வருடம் போதியளவு அங்கு நெற் கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

தனியாருக்கு குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்வதனால் பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக தமது வீடுகளிலிலேயே நெல்லை களஞ்சியப்படுத்திவைத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்