தென்னாபிரிக்க அணியில் கெவின் பீட்டர்சன்?

தென்னாபிரிக்க அணியில் கெவின் பீட்டர்சன்?

தென்னாபிரிக்க அணியில் கெவின் பீட்டர்சன்?

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 7:26 pm

அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் 2013 – 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டார். ஆனாலும் அவர் கிளப் வடிவிலான 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். தற்போதைய ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணிக்காக ஆடுகிறார்.

பீட்டர்சன் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறார். ஆனால் இங்கிலாந்து அணிக்காக அல்ல, தென்னாபிரிக்கா அணிக்காக.

பீட்டர்சனின் சொந்த நாடு தென்ஆபிரிக்கா. அங்கு இடம் கிடைக்காமல் தான் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.

ஒரு அணிக்காக விளையாடிய வீரர் இன்னொரு அணிக்கு தாவ வேண்டும் என்றால் அதற்கு 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே 2018 ஆம் ஆண்டில் தான் அதற்குரிய தகுதியை பீட்டர்சன் எட்ட முடியும். அப்போது அவரது வயது 37.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்