துறைமுக ஊழியர்களுக்கு விசேட புதுவருட கொடுப்பனவு

துறைமுக ஊழியர்களுக்கு விசேட புதுவருட கொடுப்பனவு

துறைமுக ஊழியர்களுக்கு விசேட புதுவருட கொடுப்பனவு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 4:37 pm

துறைமுகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் விசேட புதுவருட கொடுப்பனவினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க, அர்ஜுன ரணதுங்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா ஆகிய அமைச்சர்கள் மற்றும் தொழிற் சங்கத் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடாந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் டிசம்பர் மாதத்தில் விசேட கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊக்குவிப்புக் கொடுப்பனவு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடி அறிக்கையொன்றினை தயாரிப்பதற்காக குழுவொன்றினை நியமித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்