10 வருடங்களில் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பணத்தொகை 2.8 ட்ரில்லியன் ரூபாய்கள்

10 வருடங்களில் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பணத்தொகை 2.8 ட்ரில்லியன் ரூபாய்கள்

10 வருடங்களில் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பணத்தொகை 2.8 ட்ரில்லியன் ரூபாய்கள்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 8:02 pm

சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து பணம் வௌிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை குளோபல் ஃபனான்சியல் இன்டர்கிரிட்டி அறிக்கையின் இணை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரையான 10 வருடங்களில் 2.8 ட்ரில்லியன் ரூபா சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நியூஸ் பெஸ்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் கூறியுள்ளார்
இந்த விடயம் தொடர்பில் 2015 குளோபல் ஃபைனான்சியல் இன்டகிரிட் அறிக்கையின் இணை ஆசிரியர் ஜோசப் ஸ்பென்ஜர்ஸ் தெரிவித்ததாவது;

[quote]அரசாங்கத்தின் மோசடியாகவே நாம் சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கலை அடையாளப்படுத்துகின்றோம். இலங்கையை எடுத்துக்கொண்டால், சுமார் 20 பில்லியன் டொலர் கடந்த 10 வருடங்களுக்குள் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இறக்குமதி நடவடிக்கைகளின்போது தவறான தகவல்களை உரிய விலையை விட கூடுதல் விலைக்கு சமர்ப்பித்து அதற்கான பற்றுச்சீட்டுக்கள் ஊடாகவே 17 பில்லியன் டொலர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் விருப்பத்துடன் இருக்கின்றோம்.[/quote]

சட்டவிரோதமாக நாட்டிலிருந்து பணம் வௌியேற்றப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்ற காலப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அஜித் நிவாட் கப்ராலிடம் இது குறித்து நாம் வினவியபோதிலும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்