அலரி மாளிகை சதித்திட்டம் தொடர்பான அறிக்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் சமர்பிப்பு

அலரி மாளிகை சதித்திட்டம் தொடர்பான அறிக்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் சமர்பிப்பு

அலரி மாளிகை சதித்திட்டம் தொடர்பான அறிக்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் சமர்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 2:53 pm

கடந்தவருடம் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பூரண விசாரணை நடத்தப்பட்டு சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என் கே இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

இன்று ஓய்வு பெறும் பொலிஸ் மாஅதிபர் பொலிஸ் தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறியுள்ளார்.

இத்தகையதொரு சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதா இல்லையா என்பதையும் வழக்கு விசாரணை நடத்த வேண்டுமா இல்லையா என்பதையும் சட்டமாஅதிபரே தீர்மானிப்பார் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்