ஶ்ரீலங்கா பசுமை கட்சியின் பதிவை இரத்து செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

ஶ்ரீலங்கா பசுமை கட்சியின் பதிவை இரத்து செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

ஶ்ரீலங்கா பசுமை கட்சியின் பதிவை இரத்து செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2016 | 12:35 pm

ஶ்ரீலங்கா பசுமை கட்சியின் பதிவை இரத்து செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த கட்சியின் வருடாந்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காமையே இதற்கு காரணம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிகளை மீள் பதிவு செய்வதன் நிமித்தம் கட்சிகளின் வருடாந்த கணக்காய்வு அறிக்கையை ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் மேலுதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு அமைய பல கட்சிகள் தங்களின் வருடாந்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்த போதிலும், சில கட்சிகள் அறிக்கையை சமர்பிப்பதற்கு கால அவகாசம் கோரியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்