பண்டாரவளையில் காரொன்று பள்ளத்தில் குடைசாய்ந்ததில் மூவர் உயிரிழப்பு

பண்டாரவளையில் காரொன்று பள்ளத்தில் குடைசாய்ந்ததில் மூவர் உயிரிழப்பு

பண்டாரவளையில் காரொன்று பள்ளத்தில் குடைசாய்ந்ததில் மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2016 | 1:40 pm

பண்டாரவளை – அப்புத்தளை பிரதான வீதியில் ஒத்தக்கடை பகுதியில் காரொன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையிலும், இளைஞரொருவர் தியத்தலாவ மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த காரொன்றே சுமார் 80 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், மகளும் மகனுமே குறித்த காரில் பயணித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்